>விண்டோசின் புதிய பதிப்புகளைப் (95, 98, 2000, Me, XP, etc.) பயன்படுத்த
>மேலும் மேலும் கணினி சக்தி தேவைப்படுகிறது. விண்டோசைத் தொடர்ந்து
>பயன்படுத்த விரும்பினீர்களானால், உங்கள் கணினியையும் புதுப்பித்துக்
>கொண்டே இருக்க வேண்டும்.
>அதிக திறனுள்ள கணினி தேவைப்படும் பணி செய்பவர்கள் புதிய கணினிகள்
>வாங்கிக் கொள்ளட்டும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, இணையம், மின்னஞ்சல்,
>கடிதம் எழுதுவது என்று கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு, இரண்டு மூன்று
>ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கணினி ஒன்றை வாங்க தேவையே இல்லை? கணினி
நிறுவனங்கள் காசு சம்பாதிப்பது மட்டும்தான் நடக்கிறது.
>
>5 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கணினி இன்றைக்கும் ஏன்
>பயன்படக்கூடாது என்று யோசித்துப் பாருங்கள்!
>பழைய கணினிகளில் லினக்சு நன்றாகவே இயங்கும். விண்டோஸ் XP நிறுவக் கூட
>முடியாத கணினிகளில் கூட லினக்சைப் பயன்படுத்தலாம். 12 வருடங்களுக்கு
>முன்பு வாங்கிய கணினியில் லினக்சு போடுவதால் ஒரு சூப்பர் கணினி கிடைத்து
>விடாதுதான். ஆனால், தினசரி வேலைகளுக்கு அது தாராளமாக போதும்.
ltsp சரியான தீர்வு. இதைப்ற்றிய சிறிய தொகுப்பு இங்கே
http://ramanchennai.wordpress.com/2009/07/24/